சென்னை, தமிழ்நாடு சட்டசபையின் செயல்பாட்டை காண கடந்த 28 நாட்களில் 32,555 பேர் வருகை புரிந்துள்ளதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். பட்ஜெட் தாக்கல் தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம், 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் (6-ந் தேதி) வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து, 7, 10, 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரியவில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது. அனல் பறந்த சட்டசபை இதனைத் தொடர்ந்து, ஆகஸ்டு 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. மொத்தம் 55 துறைகள் இருப்பதால், தினமும் 3, 4 துறைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. முக்கியமாக, கடந்த 3-ந் தேதி முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் கைவசம் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதால், சட்டசபையில் அனல் பறந்தது. கூட்டத்தொடர் நிறைவு இந்த நிலையில், நேற்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்துடன் பதில் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில், சட்டசபையில் இன்று 11 சட்ட மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் (செவ்வாய் கிழமை) நிறைவடைந்தது. 28 நாட்களாக, மொத்த அலுவல் 170 மணி நேரம் நடைபெற்றது. சட்டசபை நிறைவு நாளான இன்று, உரிமைக்குழு, மனுக்கள் குழு, விதிகள் குழு என்பன உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. 32,555 பேர் வருகை இந்நிலையில் 28 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத் தொடரின் செயல்பாட்டை காண 32,555 பேர் வருகை புரிந்ததாக சட்டசபை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். முன்பு ஆண்டுக்கு சராசரியாக 20 பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் வந்ததாகவும், இம்முறை 75 பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமாக வந்திருந்ததாகவும் சுட்டிக்காட்டினார். மேலும் முந்தைய ஆண்டுகளில் ஒரு ஆண்டிற்கு சுமார் 20 ஆயிரம் பேர் மட்டுமே சட்டசபையை நேரில் பார்க்க வந்த நிலையில், இந்த முறை பார்வையாளர்களின் வருகையும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆண்டு வாரியாக பார்வையாளர்கள் (28 நாட்களில்) 2021 ஆண்டு -22,651 பேர், 2023 ஆண்டு -20,137 பேர், 2024 ஆண்டு - 10,754 பேர், 2025 ஆண்டு - 20, 123 பேர், 2026 ஆண்டு - 32,055 பேர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/32555-people-visited-to-witness-the-tamil-nadu-legislative-assembly-proceedings-over-28-days




