சென்னை, கொளத்தூர் தொகுதி தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் த.வெ.க. சார்பில் வி.எஸ்.பாபு போட்டியிட்டு வெற்றி பெற்றார். பொதுவாக தேர்தலில் வெற்றிப் பெற்றவர்களை எதிர்த்து தேர்தல் வழக்கு, தேர்தல் முடிவு வெளியாகி 45 நாட்களுக்குள் தாக் கல் செய்யவேண்டும். ஆனால், வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்கு தொடரவில்லை. இன்று தீர்ப்பு இந்தநிலையில், கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்களில் முறைகேடு நடந்திருப் பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கை மு.க.ஸ்டாலின் தொடர்ந்தார். 45 நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யாததற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் விசாரித்து தீர்ப்புக் காக தள்ளிவைத்தனர். இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பிறப்பிக்க உள்ளனர். இதனால் திமுகவினரிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/verdict-today-in-the-case-filed-by-mk-stalin




