கௌதம் சிவராமன் இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் படத்திற்கு ‘பிக்காசோ’ என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. ‘டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குநர் சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், ‘வித் லவ்’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் டூரிஸ்ட் பேமிலி பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்திருந்தனர். காதலை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் ரஜினிகாந்திடமும் படக்குழு பாராட்டு பெற்றது. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் அறிமுக இயக்குநர் கெளதம் சிவராமன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கிறார். இந்த புதிய திரைப்படத்தில் யோக லட்சுமி, கானா வினோத், நடிகை ஷிவானி நாகராம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதில், நடிகர் சிவராஜ்குமார் அபிஷனுக்கு அப்பாவாக நடிக்கவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் துவங்கியது. படத்தின் அறிவிப்பு கிளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். படத்தின் டைட்டில் வெளியீடு இந்நிலையில், கௌதம் சிவராமன் இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் படத்திற்கு ‘பிக்காசோ’ என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. The name is! "Karunada Chakravarthy" Dr. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/abhishan-jeevindh-shivarajkumars-film-title-reveal




