"இப்போது நாம் சொல்வதை ஏ.ஐ. கேட்கிறது. ஒரு வேளை எதிர்காலத்தில் நாம் சொல்வதை அது கேட்காவிட்டால் என்ன செய்வது?"ஏ.ஐ. வளர்ச்சியைப் பார்க்கும்போது பலருக்கும் எழும் பயம் இதுதான். மனிதர்களைவிட அதிக திறன் பெற்று, தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கினால் அதை எப்படி நிறுத்துவது?, கட்டுப் பாட்டை மீறிச் சென்றால், மின்சாதனத்தில் 'ஆப்' பட்டனை அழுத்துவதுபோல ஏ.ஐ.யையும் ஒரே நொடியில் செயல் இழக்கச் செய்ய முடியாதா? இதற்காகத்தான் தற்போது 'ஏ.ஐ. கில் ஸ்விட்ச்' (AI Kill Switch) என்ற யோசனை தீவிரமாக விவாதிக் கப்படுகிறது. அதாவது, ஒரு ஏ.ஐ. ஆபத்தான முறையில் அல்லது எதிர்பாராத விதமாக மனிதர்களுக்கு எதிராக செயல்படத் தொடங்கினால், அதன் செயல்பாட்டை அவசரமாக நிறுத்துவதற்கான பாதுகாப்பு அமைப்பு இது. இந்த யோசனை வெறும் கற்பனையாக மட்டும் இல்லை. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், அதிநவீன ஏ.ஐ. மாடல்க ளுக்கான 'கில் ஸ்விட்ச்' சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய நிபுணர்கள் குழுவை அமைக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. ஆனால், "ஒரு சிவப்பு பட்டனை வைத்துவிட்டால் பிரச்சினை முடிந்தது” என்று நினைக்க முடியாது. காரணம், ஏ.ஐ. என்பது வீட்டில் இருக்கும் ஒரு கணினி அல்ல. உலகின் பல பகுதிகளில் உள்ள தரவு மையங்கள், ஆயிரக்கணக்கான சர்வர்கள், சிப்கள், காப்பு அமைப்புகள் ஆகியவற்றின் உதவியுடன் செயல்படுகிறது. எனவே, ஒரே ஸ்விட்சில் அணைப்பது சாத்தியமில்லை. அதிலும் இன்னொரு சிக்கல் இருக்கிறது. ஏ.ஐ.யை நிறுத்துவதற்காக மென்பொருளுக்குள் ஒரு ரகசிய 'கில் ஸ்விட்ச்' வைத்தால், அதையே ஹேக்கர்கள் கண்டு பிடித்து பயன்படுத்தும் அபாயமும் ஏற்படலாம். மின்சாரம்,நிதி போன்ற முக்கிய அமைப்புகளில் ஏ.ஐ. அதிகமாக இணைந்துவிட்ட நிலையில், அவசரமாக அனைத்தையும் நிறுத்துவதும் வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே எதிர்காலத்தில் ஏ.ஐ.க்கு ஒரே ஒரு 'ஆப்பட்டன்' வைப்பதைவிட, பல அடுக்குப் பாதுகாப்பு தேவைப்படும். ஏ.ஐ. நிறுவனங்களுக்கான பொதுவான பாதுகாப்பு விதிகள், நிபுணர்களின் தொடர்ச்சியான சோதனை, ஆபத்தான செயல்பாடுகளைக் கண்காணித்தல், அவசரகால நிறுத்த நடைமுறைகள் போன்றவை ஒன்றாகச் செயல்பட வேண்டியிருக்கும். அதிநவீன ஏ.ஐ. அமைப்புகளை, ஆய்வாளர்கள் மதிப்பிட அனுமதிப்பதும் முன்வைக்கப்படும் வழிகளில் ஒன்று. அதனால் "ஏ.ஐ. மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறினால் அதை அழிக்கும் பட்டன் வந்துவிட்டது" என்று இப்போதே சொல்ல முடியாது. ஆனால், அப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டால் அதை எப்படி நிறுத்துவது என்பதற்கான 'அவசர பிரேக்' குறித்து அரசுகளும், நிபுணர்களும் தீவிரமாக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். காருக்கு வேகம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு பிரேக்கும் முக்கியம். அதுபோல வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் ஏ.ஐ.க்கு, அதை உருவாக்கும் தொழில்நுட்பத்துடன் சேர்த்து அதைக் கட்டுப்படுத்தும் 'கடிவாளத்தையும்' உருவாக்க வேண்டிய காலம் வந்திருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/what-if-ai-goes-beyond-human-control-experts-launch-in-depth-research




