பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் பயணம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட, நெடிய பாதையைக் கொண்டது. ஆனால், அவர் அரசு நிர்வாகப் பொறுப்புக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சாதாரண தொண்டராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னர் பா.ஜனதா கட்சியிலும் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். கட்சிப் பணியில் அவர் காட்டிய தீவிரம், அவரை படிப்படியாக உயர்ந்த பொறுப்புகளுக்கு அழைத்துச் சென்றது. இதன் தொடர்ச்சியாக பா.ஜனதாவின் தேசிய பொதுச்செயலாளர் (அமைப்பு) பொறுப்பையும் அவர் வகித்தார். 2001-ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. அப்போது, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் மோடி தன்னை தீவிரமாக அர்ப்பணித்துக்கொண்டார். இதனை உற்று நோக்கிய பா.ஜனதா மேலிடம். அவரை குஜராத் முதல்-மந்திரியாக பொறுப்பேற்க அறிவுறுத்தியது. அதன்படி, 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி தனது 51-வது வயதில் குஜராத் முதல்-மந்திரியாக மோடி பொறுப்பேற்றார். அப்போது தொடங்கிய அவரது அரசு நிர்வாகப் பயணம், தொடர்ந்து 25 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது அவரது நிர்வாகப் பணிகள் தேசிய அளவில் கவனம் பெற்றன. தொடர்ந்து 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர் பிரதமராக பதவியேற்றார். டிஜிட்டல் இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா). அனைவருக்கும் வங்கிக் கணக்கு, சமையல் கியாஸ் இணைப்பு, அனைவருக்கும் வீடு. அனைத்து வீடுகளிலும் கழிப்பறை போன்றவை அவருடைய தலைமையில் மத்திய அரசு நடைமுறைப்படுத்திய முக்கிய திட்டங்களாகும். மோடி பிரதமராக தொடர்ந்து 3-வது முறையாக பதவி வகித்து வருகிறார். அவரது தலைமையில் பா.ஜனதா சந்தித்த நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வருகிறது. அதே நேரத்தில். பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கையிலும் காலத்துக்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அரசு நிர்வாகத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், பிரதமர் மோடியின் பயணம் இந்திய அரசியலில் முக்கியமான காலகட்டமாக பார்க்கப்படுகிறது. வருகிற அக்டோபர் 7-ந்தேதி அவர், அரசு நிர்வாகப் பொறுப்பில் 25 ஆண்டுகள் என்ற மை கல்லை எட்டுகிறார். குஜராத் முதல்-மந்திரியாக தொடங்கிய அவரது நிர்வாகப் பயணம், இன்று இந்திய பிரதமர் என்ற உயர்ந்த பொறுப்பில் தொடர்கிறது. நாட்டின் உள்நாட்டு வளர்ச்சி திட்டங்கள் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் இந்தியாவின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் முக்கிய பொறுப்பை மோடி அலங்கரித்து வருகிறார். இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சிகள். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள். அடிப்படை வசதிகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் என பல்வேறு துறைகளில் கடந்த ஆண்டுகளில் வியக்கத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அரசு நிர்வாகத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில், கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்பதும், இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் தாக்கத்தை மதிப்பிடுவதும், எதிர்காலத்தில் நாட்டுக்கு தேவையான திட்டங்களை வகுப்பதும் முக்கியமாகிறது. மோடியின் நிர்வாகப் பயணத்தின் அடுத்த கட்டத்தில், மக்களின் எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளன. அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நாட்டின் வளர்ச்சியையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/others/thalayangam/prime-minister-modis-25-years-in-government-administration




