திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள கர்லபாக்கம், யாதவர் தெருவைச் சேர்ந்தவர் லதா (45). இவர் கர்லபாக்கம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் இவர் சில நாள்களாக வேலைக்குச் செல்லவில்லை. மேலும் இவரின் வீடும் பூட்டியே இருந்தது. இந்தநிலையில் இவரின் வீட்டிலிருந்து 22-ம் தேதி தூர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கத்திக்குத்துக் காயங்களுடன் லதா, உயிரிழந்து கிடந்தார். அவரின் சடலமும் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதையடுத்த லதாவின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் லதாவை கத்தியால் குத்தியும் அவரின் தலையை சுத்தியலால் அடித்தும் கொலை செய்திருப்பது தெரியவந்தது. கொலை இதையடுத்து லதாவைக் கொலை செய்தது யார் என்று முத்தாபுதுப்பேட்டை போலீஸார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில்,அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் முனிவேல் என்பவர் அடிக்கடி லதாவின் வீட்டுக்குச் செல்லும் தகவல் தெரியவந்தது. அதனால் முனிவேலிடம் போலீஸார் விசாரித்தபோது பால் வியாபாரம் செய்து வரும் நான், லதாவின் வீட்டுக்கு பால் கொடுக்க செல்வேன் என பதிலளித்தார். இந்தச் சமயத்தில்தான் லதாவுக்கும் முதியவர் முனிவேலுக்கும் உள்ள பழக்கம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரியவந்தது. அதனால் மீண்டும் முனிவேலிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட லதாவும் முதியவர் முனிவேலும் திருமணம் மீறிய நட்பில் இருந்து வந்திருக்கிறார்கள். இந்தச் சமயத்தில் லதா, முனிவேலைத் தவிர இன்னும் சிலருடன் பழகி வந்திருக்கிறார். அதனால் லதாவை முனிவேல் கண்டித்திருக்கிறார். 20-ம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு வந்த லதாவிடம் முனிவேல், இனிமேல் நீ யாருடனும் பேசக் கூடாது எனக் கண்டித்ததாகத் தெரிகிறது. அப்போது லதா, நான் யாருடன் பேச வேண்டும், யாருடன் பேசக் கூடாது என்பதில் நீங்கள் தலையீடாதீர்கள், அதோடு உங்களுக்கு வயதாகி விட்டது என்று பேசியதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தகராறில்தான் முதியவர் முனிவேல், சுத்தியால் லதாவின் தலையில் அடித்து கொலை செய்ததாக எங்களிடம் தெரிவித்தார். அதன்அடிப்படையில் முனிவேலைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். வீட்டிலிருந்து ரத்தக்கறை படித்த சுத்தியல், கத்தி ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம்'' என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/lady-murdered-and-old-man-arrested-in-avadi



