கொல்கத்தா, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது வெறுப்பு பேச்சு வழக்கு ஒன்று தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அவரை கைது செய்ய கொல்கத்தா ஐகோர்ட்டு தடை விதித்தது. இருப்பினும் விசாரணைக்காக வருகிற 14-ந்தேதி விசாரணை அதிகாரி முன்பு மஹுவா மொய்த்ரா நேரில் ஆஜராக வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மஹூவா மொய்த்ரா மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் திபாங்கர் தத்தா, ஷீல் நாகு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மஹுவா மொய்த்ரா சார்பில் ஆஜரான வக்கீல் கோபால் சங்கர நாராயணன், மனுதாரர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும், காணொலி மூலம் ஆஜராக அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார். ஆனால் இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவில் தலையிட மறுத்து மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/case-against-mp-mahua-moitra-supreme-court-dismisses-plea-seeking-exemption-from-personal-appearance




