தூத்துக்குடி, ஒடிசா மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சரக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள 24 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். ரகசிய தகவல் ஒடிசா மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தல் கும்பல் ஒன்று சொகுசு மற்றும் சரக்கு வாகனங்கள் மூலமாக பெருமளவில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தூத்துக்குடி கடற்கரை சாலை அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சந்தேகத்திற்குரிய சரக்கு லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். 24 கிலோ கஞ்சா பறிமுதல் அந்த சோதனையில், லாரியின் உள்பகுதியில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை போலீசார் பிரித்துப்பார்த்தனர். அதில், தடை செய்யப்பட்ட போதைப்பொருளான கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து லாரியில் இருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள 24 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேர் கைது இதுதொடர்பாக லாரியில் வந்த 3 பேரை போலீசார் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். மேலும், இந்த கஞ்சா கடத்தல் பின்னணியில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/25-lakh-worth-ganja-smuggling-in-lorry-three-arrested-in-thoothukudi




