மெக்கா சவுதி அரேபியாவின் மெக்கா மீது ஏவுகணை, டிரோன் கொண்டு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் ராணுவ தளங்கள், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த சூழலில், சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, ஜெட்டா மற்றும் தைப் உள்ளிட்ட நகரங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தப்பட கூடும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். ஏவுகணை தாக்குதல் இந்த சூழலில், மெக்காவின் தெற்கே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை கொண்டும், டிரோன்களை கொண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால், மக்களிடையே பரவலாக அச்சம் ஏற்பட்டது. இதனை முன்னிட்டு மக்களுக்கு, சவுதி அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டு கொண்டது. எனினும், டிரோன்களையும், ஏவுகணைகளையும் சவுதி அரேபிய படையினர், நடு வழியிலேயே சுட்டு வீழ்த்தி விட்டனர் என தகவல் தெரிவிக்கின்றது. இதன்பின்னர் சவுதி அரசு மக்களுக்கு விடுத்திருந்த எச்சரிக்கையை வாபஸ் பெற்றுக்கொண்டது. மத்திய கிழக்கில் போர் துவங்கியது முதல் இதுவரை முதன்முறையாக மெக்கா நகரை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. சவுதி அரேபியாவின் தெற்கு பகுதியில் இதற்கு முன்பு நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் காயமடைந்தனர். இந்த சூழலில், மீண்டும் சவுதியின் மெக்கா உள்ளிட்ட முக்கிய நகரங்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/missile-drone-attack-on-mecca-houthi-rebels-strike
