ராமநாதபுரம் ராமநாதபுரத்தில் போலீசார் ரோந்துப்பணியின்போது, குப்பையில் கிடந்த தங்கக்கட்டிகள், பணம் ஆகியவற்றுக்காக 5 பேர் சண்டையிட்டு கொண்டிருந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கேணிக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நள்ளிரவில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சாலையில் சிலர் சண்டையிட்டு கொண்டிருந்தனர். அவர்களை தடுத்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணை அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தபோது, 3.8 கிலோ தங்கக்கட்டிகள், 227 கிராம் நகைகள் மற்றும் பணம் உள்ளிட்டவை இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரித்தபோது, அவை குப்பையில் இருந்து கிடைத்தன என தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து தங்கக்கட்டிகள், பணம், நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். எனினும், சண்டை போட்டு கொண்டிருந்த 5 பேரையும் போலீசார் கைது செய்யவில்லை. இதனால், தங்க கடத்தல் எதுவும் நடைபெற்று அது தெரியாமல் இருக்க குப்பையில் வீசப்பட்டனவா? அல்லது வேறு எதுவும் நடந்திருக்கிறதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து, சுங்கத்துறை மற்றும் வருவாய் புலனாய்வு துறைக்கு தகவல் அளித்துள்ளோம் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளனர். குப்பையில் தங்கக்கட்டிகள், பணம் உள்ளிட்டவை கிடந்த தகவல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-bars-cash-found-in-trash-five-men-fight-police-action




