நாம் வேலை தேடுவது, நிறுவனங்கள் நம்மை வேலைக்குத் தேடுவது, வேலை குறித்து அப்டேட்களைப் போஸ்ட் செய்வது என முழுக்க முழுக்க வேலை சம்பந்தமாக இயங்கும் ஓர் ஆப் - லிங்க்ட்இன். இந்த ஆப்பில் சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ‘ஃபீல்டிங் கோச்’-ற்கான காலிப்பணியிடத்தை அறிவித்து போஸ்ட் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்ட். “வேலைவாய்ப்பு அறிவிப்பு! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) பதவி: ஃபீல்டிங் கோச் (சிவப்பு மற்றும் வெள்ளைப் பந்து) பாகிஸ்தான் ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியில் பணியாற்றுவதற்கு, அனுபவமும் திறமையும் கொண்ட ஃபீல்டிங் கோச் ஒருவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேடுகிறது. PCB போஸ்ட்Gold: 5 நாள்களில் தங்கம் விலை ரூ.6,920 குறைவு; ஏன் குறைகிறது? - இதிலும் ஒரு சூப்பர் சான்ஸ்! பாகிஸ்தான் தேசிய அணி வீரர்களின் ஃபீல்டிங் திறன்களை மேம்படுத்துவதிலும், அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதிலும் இந்த ஃபீல்டிங் கோச்சின் பங்கு மிகவும் முக்கியமானது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பற்றி: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பது, அதை மேம்படுத்துவது மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளை நிர்வகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. > தேவையான கல்வித்தகுதி, திறன்கள் மற்றும் அனுபவம்: குறைந்தபட்சம் ‘Level II Cricket Coaching Accreditation’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். > திறமைமிக்க சர்வதேச வீரர்கள், தேசிய அளவிலான அணிகள் அல்லது ஃபிரான்சைஸ் அணிகளுடன் ஃபீல்டிங் சார்ந்த பணிகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். > ஃபீல்டிங் நுட்பங்கள், போட்டிப் பகுப்பாய்வு மற்றும் வீரர்களின் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றில் சிறந்த புரிதல் அவசியம். > நவீன ஃபீல்டிங் நுட்பங்களை உருவாக்க சர்வதேச அளவில் நடைமுறையில் உள்ள அமைப்புகள் மற்றும் முறைகளைக் கண்காணித்து மதிப்பிடுவதில் அனுபவம் வேண்டும். > சர்வதேச தரத்திற்கு ஏற்ப கிரிக்கெட் வீரர்களுக்கு வெற்றிகரமாகப் பயிற்சி அளித்த அனுபவம். > சிறந்த திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் செயல்படுத்தும் திறன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் "பெருவெள்ளத்திற்கு இந்தியா, சீனா, அமெரிக்கா காரணம்; இழப்பீடு வேண்டும்" - குற்றம்சாட்டும் நேபாள அரசு > வலுவான நிர்வாகத் திறன். > பல்வேறு பின்னணிகளைக் கொண்ட நபர்களுடன் இணைந்து சிறப்பாகப் பணியாற்றும் திறன். > சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறனுடன் கூடிய சிறந்த பகுப்பாய்வுத் திறன். > Microsoft Office Suite மற்றும் பயிற்சி சார்ந்த சாஃப்ட்வேர் பற்றிய அறிவு கூடுதல் தகுதியாகக் கருதப்படும். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 9, 2026 மாலை 5.00 மணிக்குள் பின்வரும் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.” கமென்ட்ஸ். இந்த போஸ்ட்டிற்கு, ‘பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தினாலேயே தகுதியுள்ள நபரை ஷார்ட்லிஸ்ட் செய்ய முடியவில்லை’, ‘எதற்காக இதை போஸ்ட் செய்கிறீர்கள், யாரையாவது கோச் ஆக நியமிக்க வேண்டியதுதானே?’, ‘ஆச்சரியமாக இருக்கிறதே, ரெக்கமெண்டேஷன் இல்லாமல் மெரிட் மூலம் தேர்வு நடக்கிறதா?’ போன்ற கலவையான கமென்ட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://sports.vikatan.com/pcb-seeks-pakistan-fielding-coach-through-linkedin




