சிம்ரன், ஜெயராம் இணைந்து நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. “ராட்சசி” பட இயக்குநரின் புதிய படம் ராட்சசி, கழுவேத்தி மூர்க்கன் படங்களை இயக்கியவர் கவுதம் ராஜ். இவரின் அடுத்த படப்பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த படத்தில் நடிகர் ஜெயராம், சிம்ரன் நடிக்கிறார்கள். பஞ்சதந்திரம் படத்தில் இருவரும் இணைந்து நடித்து இருந்தாலும், அதில் கமல் ஜோடியாக சிம்ரன் வருவார். இந்த படத்தில் ஜெயராம் ஜோடியாக முதன்முறையாக நடிக்கிறார். ஜெயராம் ஜோடியாக சிம்ரன் படம் குறித்து ஜெயராம் பேசுகையில், “ஒரு சந்தோஷமான நேரம் இது. நடிகை சிம்ரன் உடன் பஞ்சதந்திரம் படத்தில் நடித்தேன். அதன் பின் அவருடன் ஜோடியாக தற்போது நடிக்கிறேன். மகிழ்சியாக உள்ளது” என்றவர் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்தினை தெரிவித்தார். நடிகை சிம்ரன் பேசுகையில், “ஒரு சிறந்த கலைஞரால் தான் சிறந்த கதையை உருவாக்க முடியும். ஜெயராம் மிகப்பெரிய நடிகர். அவருடன் படம் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 90 மற்றும் ஜென் சி ஆகியோருக்கு நெருக்கமான கதையாக இது இருக்கும்” என்றார். கவுதம் ராஜ் இயக்கிய ராட்சசி கல்வி பற்றிய சமூக அக்கறை கதையாக இருந்தது. கழுவேத்தி மூர்க்கன் கிராமபுற பின்னணியில் ஒரு சீரியஸ் கதையாக இருந்தது. ஆனால், இந்த படம் காதல் கலந்த காமெடியாக இருக்கும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த படத்தை ஆர்யாவின் பட நிறுவனமும் இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/simran-to-act-opposite-jayaram-for-the-first-time




