சென்னை, 72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 2024-ம் ஆண்டு சென்சார் சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்குநராக தனக்கு கிடைத்துள்ள முதல் தேசிய விருது தனது வாழ்நாளில் மறக்க முடியாத ஆசீர்வாதம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தேசிய விருதுகள் தேர்வுக்குழு உறுப்பினரான கலா மாஸ்டர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நமது தமிழ் திரைப்படங்களுக்கு அதிக விருதுகள் கிடைப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. சுமார் 9 விருதுகள் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு கிடைப்பது மிகப்பெரிய சந்தோஷம். தேசிய விருதுகளுக்கு இந்த முறை போட்டி மிகவும் அதிகம். சுமார் 400 படங்கள் போட்டியில் இருந்தன. ஒவ்வொரு படமும் தரமாக எடுக்கப்பட்டிருந்தது. ராயன் திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த படத்தை தனுஷ் மிக அழகாக இயக்கியிருக்கிறார். சிறந்த படத்தை தேர்வு செய்வது மிகவும் கடினமான விஷயம். இவர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை? அவர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை? என்றெல்லாம் நாம் பேச முடியாது. தேர்வுக்குழு உறுப்பினர்கள் 10 பேர், சேர்மன் ஒருவர் ஆகியோர் சேர்ந்து ஓட்டெடுப்பு முறையில் படங்களை தேர்வு செய்துள்ளோம். இதில் தென்னிந்தியாவில் இருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தலா 4 பேர்தான் இருந்தோம். இருப்பினும் வட இந்தியாவை சேர்ந்த உறுப்பினர்களும் நமது தமிழ் படங்களுக்கு வாக்களித்து தேர்வு செய்துள்ளனர். ” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/dhanush-has-directed-the-movie-raayan-beautifully-kala-master-national-award-selection-committee-member-in-an-interview




