சென்னை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 100 மருத்துவ இடங்களை வழங்குவதற்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மாணவர்களின் மருத்துவராகும் கனவு நாமக்கல் மற்றும் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா 50 மருத்துவ இடங்களை உயர்த்தி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளிலுள்ள மொத்த மருத்துவ இடங்களை 5,150-ஆக மாற்றும் இந்த அறிவிப்பின் மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவு எளிதில் நனவாகுவதோடு, தமிழக மக்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை! நன்றி தமிழகத்தின் கல்வியிலும் சுகாதாரத்திலும் முக்கிய மைல்கல்லான இத்தகைய சீரிய நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ள நமது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிற்கு தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-thanks-the-prime-minister-for-allocating-an-additional-100-seats-to-government-medical-colleges-in-tamil-nadu



