ஜே.சி.நகர், பெங்களூரு ஜே.சி. நகர் பகுதியில் 64 வயது முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். லாட்டரி இந்த நிலையில் முதியவர் தனது முகநூல் கணக்கில், 'கேரளம் மெகா லாட்டரி' என்று வந்த விளம்பரத்தை பார்த்துள்ளார். மேலும் அதில் வந்த 'லிங்கை' தொட்டு உள்ளே சென்றுள்ளார். இதில் ஒரு லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ.200 என இருந்துள்ளது. இதில் ரூ.1,000 செலுத்தி அந்த முதியவர் 5 லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் சிலர், அவர் வாங்கிய லாட்டரி டிக்கெட் ஒன்றுக்கு ரூ.12 லட்சம் பரிசு தொகை விழுந்திருப்பதாக கூறியுள்ளார். மேலும் அதனை பெற்றுக்கொள்ள ஜி.எஸ்.டி.கேட்வே வரி, வங்கி தடையில்லா சான்றிதழ் வரி மற்றும் காசோலை தடையில்லா கட்டணம் என படிப்படியாக முதியவரிடம் இருந்து ரூ.22 லட்சத்தை பெற்றுள்ளனர். மோசடி இதையடுத்து பணத்தை செலுத்திய முதியவர் பரிசு தொகையும், தான் செலுத்திய ரூ.22 லட்சமும் அவருக்கு திரும்ப வராமல் இருந்துள்ளது. இது குறித்து கேட்க முதியவர். மோசடிக்காரரகளை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் முதியவரால் அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இதில் சந்தேகமடைந்த முதியவர் உடனடியாக பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/elderly-man-cheated-out-of-rs-22-lakhs-by-claiming-to-have-won-rs-12-lakhs-in-the-lottery




