Full artikkel
முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under
Publisert
27. juni 2026
Kildenavn
Vikatan
Land
India
முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under

ஹோர்மூஸ் நீரிணையில் சரக்கு கப்பல் ஒன்றின் மீதான தாக்குதலுக்குப் பிறகு இரான் அமைதி ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து இரானில் உள்ள இலக்குகளை அமெரிக்க ராணுவம் தாக்கியுள்ளது. மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.

சரியாக 10 நாள்களுக்கு முன்பாக (ஜூன் 10, 2026), ஈரான் - அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, ஈரான், அமெரிக்கா இரண்டும் பரஸ்பர தாக்குதலை இத்தனை நாள்களுக்கு நிறுத்தி வைத்திருந்தது. ஆனால், லெபனானை இஸ்ரேல் தாக்கியதையடுத்து கடந்த 20-ம் தேதி ஹார்முஸ் நீர்ச் சந்தியை மீண்டும் மூடியது ஈரான். தங்களின் அனுமதி இல்லாமல் ஹார்முஸில் போக்குவரத்து இருக்கக்கூடாது. மீறினால், கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று வேறு எச்சரிக்கப்பட்டிருந்தது. ஹார்முஸ் நீர்ச்சந்தி இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (ஜூன் 25, 2026), கிட்டத்தட்ட 21 கப்பல்கள் ஹார்முஸை அனுமதி இல்லாமல் கடந்தன என்று Kpler (கப்பல் போக்குவரத்துக்கான வலைதளம்) கூறுகிறது. அப்படி, ஹார்முஸ் நீர்ச் சந்தியை அனுமதி இல்லாமல் கடக்க முயன்ற சிங்கப்பூர் கொடி ஏந்திய கப்பல் மீது நேற்று (ஜூன் 26, 2026) தாக்குதல் நடத்தியிருக்கிறது ஈரான். இதற்கு பதிலடியாக, ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது அமெரிக்கா. இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் ஒரு பிரிவான அமெரிக்க மத்திய கட்டளையகம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது... "நேற்று ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியே சென்று கொண்டிருந்த ஒரு வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்க மத்திய கட்டளையக (CENTCOM) படைகள் ஜூன் 26 அன்று ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தின. வணிகக் கப்பல்கள் மீது ஈரான் படைகள் நடத்திய இந்த அத்துமீறிய தாக்குதலானது, போர்நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறியுள்ளது. அதுமட்டுமின்றி, மிக முக்கியமான சர்வதேச வர்த்தகப் பாதையான இப்பகுதியில் வணிகப் போக்குவரத்து அதிகரித்துவரும் வேளையில், ஈரானின் இத்தகைய ஆபத்தான நடவடிக்கை கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் சீர்குலைத்துள்ளது". ஈரானின் இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாகச் சென்று கொண்டிருந்த கப்பல்களைக் குறிவைத்து, ஈரான் இஸ்லாமியக் குடியரசு ஒரே வழியில் சென்று தாக்கும் குறைந்தது நான்கு டிரோன்களை ஏவித் தாக்கியுள்ளது. இதில் ஒரு டிரோன், மிகப்பெரிய மற்றும் மிக அதிக மதிப்புமிக்க சரக்குக் கப்பல் ஒன்றின் மேல் தளத்தை பலமாகத் தாக்கியுள்ளது. இதனால் கப்பலுக்குச் சேதம் ஏற்பட்ட போதிலும், அது தொடர்ந்து தனது பயணத்தைத் தொடர முடிந்தது. மற்ற மூன்று டிரோன்களை எங்கள் படைகள் சுட்டு வீழ்த்திவிட்டன. மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், இது இருதரப்புக்கும் இடையே இருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஒரு முட்டாள்தனமான செயலாகும்" என்று பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.

வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மான் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்துக்காக மலேசியா மற்றும் சீனாவைத் தேர்ந்தெடுத்துள்ளார். பயணத் திட்டத்திலிருந்து இந்தியா விலக்கப்பட்டதை ஒரு நேரடி செய்தியாகக் கருதுவது முன்கூட்டிய முடிவாக இருக்கலாம் என்றாலும், இது ஒரு ராஜீய சமநிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டவேண்டும் என்பது இந்து அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. தற்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு பக்தர்கள் உலகம் முழுவதும் இருந்து நன்கொடைகளை வாரி வழங்கி வருகின்றனர். கோயில் கட்டவும் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பல ஆயிரம் கோடி அளவுக்கு நன்கொடைகளை வழங்கினர். தற்போதும் கோயில் வளாகத்தில் இருக்கும் உண்டியலில் அதிக அளவில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்த உண்டியல் பணம் கையாடல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சியும் புகார் செய்திருந்தது. இதையடுத்து இது குறித்து விசாரிக்கும்படி கோயில் நிர்வாகம் மாநில அரசிடம் கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் இப்புகார் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. ராமர் கோயில் அக்குழு நடத்திய விசாரணையில் கோயில் வளாகத்தில் இருக்கும் உண்டியலில் வசூலான பணத்தில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிறப்பு விசாரணைக்குழு தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. டின்னு யாதவ், அனுகல்ப் மிஸ்ரா, லவ்குஷ் மிஸ்ரா, அவினாஷ் சுக்லா, மணீஷ் யாதவ், சுபாஷ் ஸ்ரீவஸ்தவா, கருணேஷ் பாண்டே மற்றும் ராம்சங்கர் மிஸ்ரா ஆகியோர் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்பார்வைப் பொறுப்பில் இருந்த யாதவை தவிர, மற்ற அனைவரும் கோயிலில் கிடைக்கும் நன்கொடை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆவர். ஆரம்பத்தில் இத்திருட்டு குறித்த புகார்களை கோயில் நிர்வாகமும், மாநில அரசும் மறுத்து வந்தது. ஆனால் இப்போது ரூ.7 முதல் 7.5 கோடி அளவுக்கு உண்டியல் பணம் கையாடல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சுபாஷ் ஸ்ரீவஸ்தவா, 40 உண்டியல் பெட்டிகளில் பக்தர்கள் செலுத்தும் சேகரிக்கப்பட்ட நன்கொடை பணத்தை எண்ணும் பொறுப்பில் இருந்தார். கோவில் நன்கொடையை கையாடல் செய்ததாக சந்தேகிக்கப்படும் ஏழு பேருடன் சேர்ந்து ஸ்ரீவஸ்தவாவின் பங்கு குறித்து விசாரணை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ராமர் கோயில் உண்டியல் பணத்தில் திருட்டு நடந்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என்று விஷ்வ இந்து பரிஷத் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Hold deg informert med de siste nyhetene fra pålitelige kilder