பெங்களூரு, பெங்களூரு அணி ரசிகர்களிடமிருந்து நான் பெற்ற அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என புவனேஷ்வர்குமார் தெரிவித்துள்ளார். பெங்களுரு அணி தொடர்பாக அவர் கூறியதாவது, பெங்களுரு அணி ரசிகர்களிடமிருந்து நான் பெற்ற அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சமூக வலைதளங்களில்ரசிகர்கள் எனக்கு அளித்து வரும் ஆதரவும் அன்பும் உண்மையிலேயே நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது. என்னைப் பற்றி ரசிகர்கள் ரீல்ஸ்களும் வீடியோக்களும் உருவாக்கி வருகின்றனர். அது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியையும் அர்த்தத்தையும் கொடுக்கிறது என்பதை வார்த்தைகளால் சொல்லவே கடினமாக உள்ளது. என்னுடைய பெயர் ஐபிஎல் ஏலத்தில் வந்தபோது, சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நான் உத்தரப் பிரதேச அணிக்கு கேப்டனாக இருந்தேன். நாங்கள் மைதானத்திற்குள் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது, மும்பை மற்றும் லக்னோ அணிகள் என்னை ஏலத்தில் எடுக்க போட்டியிடத் தொடங்கின. ஏலத்தொகை ரூ.5 அல்லது ரூ.6 கோடியை எட்டியதும், நான் அங்கிருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சில ஓவர்கள் முடிந்த பிறகு ஒருவர் வந்து, பெங்களுரு என்னை ஏலத்தில் எடுத்துவிட்டதாகச் சொன்னார். எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட அணியின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/the-love-i-received-from-bengaluru-team-fans-bhuvneshwar-kumar-moved




