மும்பை, மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் நாக்பூர் - சந்திரப்பூர் நெடுஞ்சாலையில் இன்று அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. நாக்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த அந்த பஸ்சில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். 12 பேர் படுகாயம் இந்நிலையில், அதே சாலையில் மற்றொரு தனியார் பஸ் நாக்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையில் முன்னே சென்றுகொண்டிருந்த அரசு பஸ் மீது தனியார் பஸ் திடீரென மோதியது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் அரசு பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் இரு பஸ்களிலும் பயணித்த 12 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று காயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும்,இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/maharashtra-2-buses-collide-12-injured




