தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், துறைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களில் “லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்” என்ற வாசகத்துடன் கூடிய அறிவிப்பு பலகையை பொதுமக்கள் எளிதில் காணும் இடங்களில் கட்டாயம் வைக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் டாக்டர் சாய் குமார் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே இது தொடர்பாக பலமுறை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், சில அலுவலகங்களில் அவை முறையாக பின்பற்றப்படவில்லை என்றும், அறிவிப்பு பலகைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை என்றும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. லஞ்சம் இதையடுத்து, அனைத்து துறைகளுக்கும் ஒருங்கிணைந்த புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் “லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்” என்ற வாசகத்துடன், ஊழல் தொடர்பான புகார்களை தெரிவிக்க லஞ்ச ஒழிப்புத்துறையின் முகவரி, தொலைபேசி எண்கள், வாட்ஸ்அப் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் கூடிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசு துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தங்களது அதிகாரபூர்வ இணையதளங்களிலும் இதே தகவலை வெளியிட்டு, லஞ்ச ஒழிப்புத்துறையின் இணைய இணைப்பை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நடைமுறையில் உள்ளதா என்பதை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆய்வுப் பிரிவுகள் மற்றும் ஆய்வுக் குழுக்கள் நேரடியாக ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றும், அனைத்து துறைகளும் உத்தரவு முழுமையாக செயல்படுத்தப்பட்டதற்கான Compliance Report-ஐ மனிதவள மேலாண்மைத் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/govt-offices-anti-bribery-boards-mandatory




