சென்னை, கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் ஆதரவாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் ஆதரவாளர் என கூறப்படும் ஜமால் முகமது குறித்து வழக்கறிஞர் ரியாஸ் அவதூறாக பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரியாஸை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட கும்பல் அவரை பெரம்பூரின் கே.கே.ஆர். அவென்யூ பகுதிக்கு வரவழைத்து அங்குவைத்து ரியாஸ் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இந்தத் தாக்குதலில் ரியாஸின் தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு ரியாஸ் பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து தாக்குதல் குறித்து வழக்கறிஞர் ரியாஸ் திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் ஆதரவாளர் ஜமால் முகமது உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-a-supporter-of-kolathur-mla-vs-babu




