தூத்துக்குடி, தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய தங்க நகைகள் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம்-III தீர்ப்பளித்துள்ளது. 23½ சவரன் நகை திருட்டு வழக்கில் 2 பேர் கைது கடந்த 2025-ம் ஆண்டு தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கங்கா பரமேஸ்வரி காலனியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் ராமகிருஷ்ணன் (வயது 57) என்பவருடைய வீட்டின் கதவை உடைத்து, வீட்டில் இருந்த 23½ சவரன் தங்க நகைகள் திருடு போனது. இது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் பாண்டியன்(38) மற்றும் தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த சத்தியசீலன் மகன் பேரின்பநாதன்(22) ஆகிய 2 பேரையும் சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை இந்த வழக்கு விசாரணை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம்- III-ல் (JM - III) நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி விஜயராஜ்குமார் இன்று (29.9.2026) பேரின்பநாதனை விடுதலை செய்தும், பாண்டியன் என்பவரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/23-sovereign-jewel-theft-case-convict-gets-6-years-in-prison




