சென்னை, தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. இதற்கிடையே, நேற்று முன் தினம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி சவரனுக்கு ரூ.2,320-ம், கிராமுக்கு ரூ.290-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,13,920-க்கும், ஒரு கிராம் ரூ. 14,240-க்கும் விற்பனையானது. அதேபோல, நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,880-க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,360-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தங்கம் விலை இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.170 குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-have-dropped-sharply-what-are-todays-rates




