சூரியின் 'மண்டாடி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். Mandadi - மண்டாடி மதிமாறன் புகழேந்தி, இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தற்போது இப்படத்தின் சிறப்புக்காட்சியைப் பார்த்துவிட்டு இயக்குநர் வெற்றிமாறன் பேட்டியளித்திருக்கிறார். அவர் பேசுகையில், "நான் உதவி இயக்குநராகப் பணியாற்றிய காலத்திலிருந்தே, எனது உதவி இயக்குநர்கள் படம் இயக்கும் காலம் வரை கிட்டத்தட்ட 15 முதல் 20 திரைப்படங்களின் வசூல் நிலவரங்களை மிக நெருக்கமாகக் கவனித்திருக்கிறேன். ஆனால், நான் பார்த்த முதல் 'பிளாக்பஸ்டர்' திரைப்படம் இதுதான். இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இத்திரைப்படத்தை நான் முதலில் பார்த்தபோது என்ன உணர்ந்தேனோ, அதே உணர்வுதான் இப்போதும் எனக்குள் இருக்கிறது. படக்குழுவினரின் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் திரையரங்குகளில் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இயக்குநர் வெற்றி மாறன் அவர்கள் இந்தத் திரைப்படத்தோடு தங்களை கனெக்ட் செய்து கொள்கிறார்கள். தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் நல்ல வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, இயக்குநர் மதிமாறன், நடிகர் சூரி மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இத்தகைய கதைக் களத்தில் இவ்வளவு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சலுக்காகவே இவர்கள் அனைவரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்" எனப் பகிர்ந்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://cinema.vikatan.com/kollywood/vetrimaaran-praise-soori-mandaadi-movie-blockbuster


