சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- சுகாதார சீர்கேடு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் உலவும் எலிகள் - தவெக அரசின் அலட்சியத்திற்கு வன்மையான கண்டனம்! கோவை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் எலிகள் எகிறி குதிக்கும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கிறது; ஏழைகளின் உயிரைக் காக்கும் மருத்துவமனையில் இத்தகைய சுகாதாரச் சீர்கேடு நிலவுவது, முதல்-அமைச்சர் விஜய் அரசின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது. உலவும் எலிகள் மிகக் கடுமையான உடல்நலப் பாதிப்புடன் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு, அங்கு உலவும் எலிகளால் மேலும் பல புதிய தொற்று நோய்களும் உபாதைகளும் ஏற்படும் பேராபத்து உருவாகியுள்ளது. மருத்துவமனை வளாகத்தைத் தூய்மையாகப் பராமரிக்கத் தவறிய நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு முற்றிலும் கண்டிக்கத்தக்கது. எனவே, ஜோசப் விஜய் அரசு இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பணியில் மெத்தனம் காட்டிய அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/rats-roaming-in-the-emergency-room-of-a-government-hospital-nainar-nagendran-condemns




