கோவை கோவையில் மூன்றடுக்கு கட்டிடம் திடீரென குலுங்கியதில் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மூன்றடுக்கு கட்டிடத்தில் திடீரென அதிர்வு ஏற்பட்டது. இதனால், கட்டிடத்தில் இருந்த நகை செய்யும் பணியாளர்கள் அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர். நிலநடுக்கம் ஏதும் ஏற்பட்டு விட்டதா? அல்லது கட்டிடம் பலவீனமடைந்து குலுங்கி விட்டதா? என உடனடியாக தெரியவில்லை. வெளியேற அறிவுறுத்தல் இந்த கட்டிட அதிர்வுக்கான காரணம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கட்டிடத்தில் இருந்தவர்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி அறிவுறுத்தல் அளிக்கப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/commotion-in-coimbatore-three-storey-building-shakes-suddenly




