சென்னை, ஒரு வயது ஆண் குழந்தை காய்ச்சல் காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வயது குழந்தை பலி சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த பாபு - சங்கீதா தம்பதியினருக்கு கடந்த ஆண்டு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களில் ஒருவரான ஒரு வயதான கிருதன் கடந்த 2 நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், குழந்தையின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதனைத்தொடர்ந்து, பெற்றோர் அவரை சிகிச்சைக்காக பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். விசாரணை இது குறித்து தகவல் அறிந்த திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே குழந்தையின் உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-in-thiruverkadot-one-year-old-child-dies-of-fever




