சிறுநீரக நோயாளிகளுக்கான உதவிக்குழு சந்திப்பானது ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெற்றது. இதில் சிறுநீரகம் செயலிழந்து டயாலிசிஸ் செய்பவர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு அவர்களை கவனித்துக்கொள்ளும் குடும்பத்தினர்கள் என பல்வேறு ஊர்களிலிருந்து வந்து இதில் கலந்து கொண்டனர். பின்தங்கிய மக்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு சரியான நிதி உதவி கிடைக்காமல் அல்லல்படுபவர்கள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீள முடியாதவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பது, என எந்தவொரு லாபநோக்கமும் இல்லாமல் உதவிக்கரம் நீட்டுகிறது "டாக்டர்நெட் இந்தியா (Doctornet India)" தன்னார்வ அமைப்பு. கடந்த 9 ஆண்டுகளாக "நலம் பெறுவோம்" என்ற பெயரின் கீழ், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைக்கிறது இந்நிறுவனம். இவர்கள் அமைப்பில் தன்னார்வலர்களாக 600 மருத்துவர்கள் உள்ளனர். மேலும், 4300க்கும் மேற்பட்ட நோயாளிகள் பூரண குணமடைந்துள்ளனர். இந்த சந்திப்பானது காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதில் சிறுநீரக நிபுணர்களான டாக்டர் ஆனந்தன், ஜெயப்பிரகாஷ் மற்றும் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறுநீரக நோய்க்கு டயபடீஸ் நோயும் ஒரு காரணி, பாதிப்பு ஏற்பட்டால் தன் உடலை முறையாக கவனித்துக் கொள்ளுதல், முறையாக மருந்துகளை உட்கொள்வது, BP-யை 130க்கு கீழ் குறையாமல் வைத்துக்கொள்வது, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது, தொடர்ந்து டயாலிசிஸ் செய்வது, கவுன்சிலிங் செல்வது, சுற்றுவட்டாரத்தை சுகாதாரத்துடன் வைத்துக்கொள்வது, இண்ஃப்பெக்ஷன் வராமல் தடுப்பது, குடும்பதினர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமேஷனல் சப்போர்ட்டுடன் இருப்பது. இவற்றையெல்லாம் மிக சிரத்தையோடு செயல்பட்டு கையாள வேண்டும் என, விழிப்புணர்வை ஏற்படுத்தி உரையாடினார்கள். தற்போதைய சூழலுக்கு டயாலிசிஸ் செய்தாலும், Longterm - க்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் சரியானதாக இருக்கும் என்றும் அறிவுறுத்துகின்றனர். மீண்டவர்களின் சொல், விதைக்கும் நம்பிக்கை! ஒரு தனிநபர்க்கு காய்ச்சல்,சளியை தாண்டி ஏதேனும் ஒரு நோய் வந்து விட்டால் அவர்கள் இனி, நாம் மற்றவர்கள் போல் சாதாரண வாழ்வை வாழ முடியாது என பயப்படுகிறார்கள். தன்னை சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்வது, நோயிலிருந்து விடுபட்டு மீண்டும் சாதாரண வாழ்வை வாழ வேண்டும் என நினைக்காமல் சிலர் முடங்கியும் போகிறார்கள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை, மனஉறுதியோடும், தன்னம்பிக்கையோடும் இருந்தால் நோயிலிருந்து மீண்டு நன்றாக வாழ முடியும் என நம்பிக்கை விதைக்கிறார்கள் "சிறுநீரக நோயில் இருந்து மீண்டவர்கள்." இரண்டு முறை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒருவர் கூறியதாவது; "சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் பயப்படாமல் இருக்க வேண்டும், தனிமையை தவிர்ப்பது, அவர்கள் நமக்காக இருக்கிறார்கள் நாமும் அவர்களுக்காக இருக்க வேண்டும் என தன் குடும்பத்தை நினைத்துப் பார்ப்பது, இப்படியே இருந்து விட்டால் போதும் என்று நினைக்காமல், நோயில் இருந்து மீண்டால் மற்றுமொரு புதிய வாழ்வு நமக்காக காத்திருக்கிறது என நினைக்க வேண்டும். நான் 2005-ல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன், அடுத்த 13 வருடத்தில் வாழ்க்கை சிறப்பாக மாறியது. நானும் மற்றவர்கள் போல் சாதாரணமாக வாழ்ந்தேன். மீண்டும் 2018-ல் சிறுநீரகம் செயலிழந்தது, ஆனால் நம்பிக்கை செயலிழக்கவில்லை, உடலில் ஏற்பட்ட நோயின் தாக்கம் மற்றும் அதை சமாளிக்க பொருளாதாரம் இல்லாமல் தான் பலர் மனதளவில் உடைந்து போகிறார்கள். அப்படிதான் நானும் இருந்தேன் பின் "டாக்டர்நெட் இந்தியா" அமைப்பின் உதவியோடு 2025-ல் மீண்டும் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்" என வலிமையான நம்பிக்கையோடு பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/health/dialysis-patients-support-meeting-held-in-coimbatore




