சென்னை, சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி கோரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 90 சதவீத மரங்கள் அகற்றம் தமிழகத்தில் சீமை கருவேலம் மரங்களை அகற்றக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போடு தமிழக அரசு தரப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு நிலங்களில் வளர்ந்திருந்த கருவேலம் மரங்கள் 90 சதவீதம் அகற்றப்பட்டுவிட்டதாகவும், வட மாவட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஜூலை 31-ம் தேதி அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிமன்றம் நியமித்த நீதிபதிகளுடன் அரசு துறை செயலாளர்கள் எந்த கூட்டத்தையும் நடத்தவில்லை என்றும், இதனால் நீதிபதிகளுக்கு யாரை சந்திப்பது என்பது கூட தெரியவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, கருவேலம் மரங்களை அகற்றுவது தொடர்பான உத்தரவை அமல்படுத்தும் வகையில், வருவாய்துறை செயலாளரை நோடல் அதிகாரியாக நியமித்த நீதிபதிகள், ஜூலை 31-ம் தேதி அவர் நேரில் ஆஜராகி தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதேபோல, சீமை கருவேல மரங்களை அகற்ற தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். 24 மணி நேரத்திற்குள் மேலும், அரசு நிலங்களில் சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி கோரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும் என வருவாய் துறை அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/removal-of-seemai-karuvelam-trees-madras-high-court-orders-tamil-nadu-government




