ஸ்ரீநகர், காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் கேலம் என்ற இடத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். செங்கல்சூளைக்கு சென்ற பயங்கரவாதிகள் காஷ்மீரில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் குல்காம் மாவட்டத்தில் கேலம் என்ற இடத்தில் உள்ள செங்கல் சூளைக்கு நேற்று மாலையில் திடீரென பயங்கரவாதிகள் வந்தனர். துப்பாக்கிச்சூடு பின்னர் அவர்கள் அங்கே பணியில் இருந்த வெளிமாநில தொழிலாளர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் 2 பேர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். உடனே அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு அனந்த்நாக்கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 2 பேர் பலி ஆனால் செல்லும் வழியிலேயே ஒருவர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரும் உயிரிழந்தார். இதற்கிடையே இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், தாக்குதல் நடந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். வெளிமாநில தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் காஷ்மீரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/terrorists-open-fire-on-migrant-workers-in-kashmir-one-killed




