நீலகிரி, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடி கோட்ட வனத்தில் காட்டு யானைகள், புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் சீகூர் வனச்சரகம் ஆனைக்கட்டி தெற்கு காவல் பகுதிக்கு உட்பட்ட தனக்கடவு பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ஒரு பெண் காட்டு யானை இறந்து கிடப்பதை கண்டனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொ டர்ந்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கிருபாகரன், கோட்ட துணை இயக்குனர் வித்யாதர் ஆகியோர் உத்தரவின் பேரில் சீகூர் வனச்ச கர் ஜெயராஜன் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார் வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் காட்டு யானை என்ன காரணத்துக்காக உயிரிழந்தது என தெரியவில்லை. இதைத்தொடர்ந்து முதுமலை தெப்பக்காடு கால்நடை உதவி டாக்டர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட மருத்துஉ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அழுகிய நிலையில் இருந்த காட்டு யானையின் உடலை ஆய்வு செய்தனர். தொடர்ந்து உரிய வழிகாட் டுதலின்படி யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முக்கிய உடற்பாகங்கள் ஆய்வக பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டது. இறந்த யானைக்கு 48 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-wild-elephant-dies-near-masinagudi




