சென்னை, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், 19 மாத குழந்தை, முளை பாதிப்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆறு நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தாலும், குழந்தையின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. தொடர் கண்காணிப்பு மற்றும் அதிதீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. ஆனால், குழந் தையின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, பெற்றோர் முன்வந்தனர். அதன்படி, இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகம் தானமாக பெறப்பட்டன. இதன் வாயிலாக, 'தமிழகத்தில், மிகவும் குறைந்த வயதுடைய உடல் உறுப்பு கொடையாளார்' என்ற பெருமையை அக்குழந்தை பெற்றது. இதற்கு முன், 20 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டிருந்தது. இந்த உறுப்பு தானச் செயலுக்கு, அரசு சார்பில், குழந்தை உடலுக்கு மரியாதை செய்யப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-organs-of-a-brain-dead-one-and-a-half-year-old-child-donated




