விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10, மொத்தம் 19 போட்டியாளர்கள் கலந்து கொள்ள, அமர்க்களமாகத் தொடங்கியிருக்கிறது. மேலும் எந்த சீசனிலும் இல்லாதபடி முதல்முறையாக இந்த சீசனில், பல போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன்பே எவிக்ட் ஆகி அறிமுக மேடையிலிருந்தபடியே வெளியேறினர். இந்த நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக மேலும் சிலரது பெயர்கள் அடிபட்டன. ஜான் விஜய், ஆல்யா மான்சா, ஜாய் கிறிசில்டா, ஆனந்தி என நீண்டது இந்தப் பட்டியல். இவர்களில் ஜாய் கிறிசில்டா குழந்தையை விட்டுச் செல்ல இயலாது என்பதால் தான் செல்லவில்லை என அவரே அறிவித்து விட்டார். ஆனால் ஸ்டேஜ் எவிக்ஷன் இருப்பதாகவும் அதில் தான் வெளியேற்றப்படலாமென நினைத்ததாலும்தான் அவர் செல்ல வேண்டாமென முடிவெடுத்ததாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. ஜாய் கிறிசில்டா ஜான் விஜய், ஆல்யா மானசா நிலைமை குறித்து எதுவும் தெரியவில்லை. ஆனந்தி விஷயத்தில் அவர் நிகழ்ச்சிக்குக் கிளம்புவதற்கு ஆயத்தமாகி விட்ட நிலையில் கடைசி நிமிடத்தில் அது மாறியதாம். அதாவது முதல் நாளில் செல்லாமல், வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் செல்லும்படி அவரை வலியுறுத்தியுள்ளார்களாம். ஆனந்தி இது தொடர்பாக நிகழ்ச்சி தொடர்பான வட்டாரத்தில் விசாரித்த போது, `இந்த சீசனில் முதல் நாளிலேயே 19 பேர் வீட்டுக்குள் செல்வதால் வைல்டு கார்டு எண்ட்ரியில் ஒருவரோ அல்லது இரண்டு பேரோதான் செல்லக்கூடும். தவிர வழக்கமாக எல்லா சீசன்களிலும் சீனியர் நடிகர் நடிகை என யாராவது கலந்து கொள்வார்கள். இந்த சீசனில் அப்படி யாரும் நேற்று செல்லவில்லை. வைல்டு கார்டு எண்ட்ரியாக ஆனந்தியை அனுப்பலாமென முடிவு செய்திருப்பதாக தெரிய வருவதாக கூறினர். இரண்டு வாரம் கழித்து ஆனந்தி நிகழ்ச்சிக்குள் செல்லலாமென எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://cinema.vikatan.com/television/news-about-last-minute-twists-of-bigg-boss-tamil-10-inauguration



