ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் புதுப்பெண் பலியானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காதல் திருமணம் கிருஷ்ணகிரி மாவட்டம், குன்னத்தூரைச் சேர்ந்த நவீன் (வயது 23), பெற்றோர் எதிர்ப்பை மீறி சத்யா(19) என்ற இளம்பெண்ணை 2 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தார். பின்னர் இந்த தம்பதியினர் சென்னையில் வசித்து வந்தனர். விபத்தில் புதுப்பெண் பலி இந்த நிலையில் இந்த தம்பதியரை பெற்றோர் சமரசமாக அழைத்ததால் நேற்று அதிகாலை சொந்த ஊருக்கு காரில் சென்றனர். அப்போது ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே சென்னசமுத்திரத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் சத்யா உயிரிழந்தார். நவீன் லேசான காயமடைந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/ranipet-newlywed-dies-after-car-hits-lorry




