சென்னை, சென்னை மண்டலம் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15-ந்தேதி டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் அதற்கு முந்தைய நாளான 14-ந்தேதி வெள்ளிக்கிழமையும், விடுமுறைக்கு அடுத்த நாளான 16-ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் மது விற்பனை நடைபெற்றது. அதன்படி, 14-ந்தேதி சென்னை மண்டலத் தில் ரூ.55.39 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.43.34 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.42.36 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.39.89 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.32.20 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றது. 5 மண்டலங்களிலும் சேர்த்து ரூ.213.78 கோடிக்கு மது விற்பனை நடந்தது. 16-ந்தேதி சென்னை மண்டலத்தில் ரூ.55.40 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.42.48 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.38.64 கோடியும், மதுரை மண்டலத்தில் ரூ.38.63 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.34.07 கோடியும் மதுவிற்பனை நடைபெற்றது. 5 மண்டலங்களிலும் சேர்த்து ரூ.209.22 கோடிக்கு மதுவிற்பனை நடந்தது. ஆன்லைன் விற்பனை சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், அதற்கு முந்தைய மற்றும் அடுத்த நாட்களில் சேர்த்து 2 நாட்களில் தமிழகத்தில் ரூ.423 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. இதில் 14-ந்தேதி ஆன்லைன் மூலம் மட்டும் ரூ.6 லட்சத்து 38 ஆயிரத்துக்கும், 16-ந்தேதி ரூ.3 லட்சத்து 59 ஆயிரத்துக்கும் மது விற்பனை நடந்துள்ளது. 2 நாட்களிலும் சேர்த்து ஆன்லைன் மூலம் ரூ.9 லட்சத்து 97 ஆயிரத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-holiday-liquor-sales-worth-423-crore-in-two-days




