லோகேஷ் கனகராஜ் நடித்த ‘டிசி’ படம் வருகிற செப்டம்பர் 4-ந்தேதி சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் லோகேஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமான படம் ‘டிசி’. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள ‘டிசி’ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜுடன் வமிதா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய் மற்றும் கஸ்தூரி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் கதை தேவதாஸ் மற்றும் சந்திரா என்ற பெயர்களின் சுருக்கமே ‘டிசி’. லோகேஷ் கனகராஜ் ‘தேவதாஸ்’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி ‘சந்திரா’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேங்ஸ்டரான லோகேஷ் கனகராஜ் தனது கூட்டாளிகளுடன் போலீசாரின் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொள்ளையடிக்கிறார். ஒரு போலீஸ் அதிகாரியைக் கொடூரமாக கொலையும் செய்கிறார். இதையடுத்து ஓட்டலில் பதுங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜை போலீசார் கைது செய்வதுடன், அவருடன் நட்பு பாராட்டிய பாடகி சஞ்சனாவை சுட்டு வீழ்த்துகிறார்கள். போலீசாரின் பிடியிலிருந்து தப்பும் லோகேஷ் கனகராஜ், எதிர்பாராத ஒரு சந்திப்பில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் வாமிகா கபியைச் சந்திக்கிறார். பிடிக்காத வாழ்க்கை வாழ்ந்து வரும் வாமிகா கபி. ஒரு கட்டத்தில் லோகேஷ் கனகராஜுடன் பயணிக்கிறார். உயிருக்கு பயந்து ஓடும் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி சந்திக்கும் போராட்டங்கள் என்ன? என்பதே பரபரப்பான மீதிக்கதை. ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த ‘டிசி’ கடந்த 7ந் தேதி வெளியான ‘டிசி’ படம் 15 நாட்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவின் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் ‘டிசி’ திரைப்படமும் இணைந்துள்ளது. ஓடிடி ரிலீஸ் இந்த நிலையில், ‘டிசி’ படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘டிசி’ படம் வருகிற செப்டம்பர் 4-ந்தேதி சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கண்டு களிக்கலாம். From the big screen to your screen! The blockbuster DC is coming home to SunNXT on September 4 in Tamil, Telugu & Malayalam. … — SUN NXT (@sunnxt) August 29, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/ott/lokesh-kanagarajs-dc-film-to-be-released-on-ott-where-and-when-can-we-watch-it




