திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆனதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள்தோறும் சுமார் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். காத்திருப்பு அறைகளில் பெரும்பாலான அறைகள் நிரம்பிவிடுகின்றன. தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன் (டைம் ஸ்லாட் டோக்கன்) பெறாமல் நேரடியாக இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சுமார் 8 முதல் 12 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. விடுமுறை நாட்களில் 20 முதல் 24 மணி நேரம் வரை ஆகிறது. நேற்று முன்தினம் 77 ஆயிரத்து 670 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 33 ஆயிரத்து 904 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். 4 கோடியே 59 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 3 லட்சத்து 4 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றனர். திருமலை அஸ்வினி மருத்துவமனையில் 3 ஆயிரத்து 932 பேர் சிகிச்சை பெற்றனர். காத்திருப்பு நேரம் எவ்வளவு? நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் நிரம்பி பாதகங்கையம்மன் கோவில் வரை வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அலிபிரி டோல்கேட்டில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. 'டைம் ஸ்லாட் டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனம் செய்ய சுமார் 24 மணி நேரம் ஆனதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று 69 ஆயிரத்து 771 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். 25 ஆயிரத்து 888 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று 4 கோடியே 42 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 65 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றனர். திருமலை அஸ்வினி மருத்துவமனையில் 4 ஆயிரத்து 91 பேர் சிகிச்சை பெற்றனர். இன்றைய நிலவரம் இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் நிரம்பி சிலாதோரணம் வெளியே வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 'டைம் ஸ்லாட் டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனம் செய்ய சுமார் 20 மணி நேரம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஐபி தரிசனம் ரத்து நாளை முதல் 14-ம் தேதி வரை தொடர் விடுமுறை நாட்கள் என்பதால், பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவிருந்த விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப, நாளை (சனிக்கிழமை) இதற்கான பரிந்துரைக் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஞாயிற்றுக்கிழமையன்று ரத்து செய்யப்பட்ட விஐபி பிரேக் தரிசனத்திற்காக ஒதுக்கப்பட்ட நேரம், பொது பக்தர்களுக்கு தரிசனம் வழங்கப் பயன்படுத்தப்படும். எனவே, பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு ஒத்துழைப்பு நல்குமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/devotional/devotees-rush-in-tirumala-approximately-24-hours-for-srivari-darshan




