திருவனந்தபுரம், நிறை புத்தரிசி வழிபாட்டுக்காக சபரிமலை கோவில் நாளை நடை திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் விவசாயம் செழிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறை புத்தரிசி வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டுக்கான பூஜையை முன்னிட்டு நாளை மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. இந்த வழிபாட்டுக்காக பாலக்காடு, ஆரன்முலா மற்றும் செட்டி குளங்கரா, தென்காசி வயல்களில் இருந்து அறுவடை செய்த நெல்லை பட்டு துணியில் தனித்தனி கட்டுகளாக கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நாளை ஊர்வலமாக புறப்பட்டு பாரம்பரிய கோவில்கள் வழியே பவனிவந்து ஆக.3ம் தேதி சபரிமலைக்கு கொண்டு வரப்படும். இந்த நெற்கதிர்களை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த நெற்கதிர்களை வீடுகளில் வைத்து பாதுகாத்து வந்தால் சகல ஐஸ்வர்யங்கள் கிடைப்பதுடன், நோய் நொடிகள் விலகும். விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை. நிறை புத்தரிசி பூஜை வழிபாடுகளுக்கு பின் அன்றைய தினம் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/devotional/full-buddha-rishi-pooja-sabarimala-temple-entrance-to-open-tomorrow




