ஜார்கண்ட் அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் முறைகே டுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, ராஞ்சியில் மாணவர்கள் போராட்டத் தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் நேற்று 21-வது நாளாக நீடித்தது. இன்று (சனிக்கிழமை) சுதந்திர தினத்தையொட்டி, தேசியக் கொடி ஏந்தி ஊர்வலம் செல்லப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். அந்த ஊர்வலம் தங்களது போராட்டத்தை வலுப்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே கடந்த 10-ந் தேதி நடைபெற்ற ஊர்வலத்தில் வெடித்த வன்முறையில் 14 போலீசார் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக அடையாளம் தெரியாத 300 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ பதிவுகள் மூலம் அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, 13 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஜார்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திக்காரி மோர்ச்சா தலைவர் தேவேந்திரநாத் மகதோ உடல்நிலை தொடர்ந்து கவலை அளிப்பதாக உள்ளது. அவர் அனுமதிக்கப் பட்டுள்ள ஆஸ்பத்திரியில், மேலும் 4 மாணவர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாக 7 பேருக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/student-protests-in-jharkhand-continue-for-the-21st-day-decision-taken-to-hold-a-procession-with-the-national-flag-today




