தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள சின்னஅம்மன்குடி, லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகையன் (51) விவசாயி. இவரது மனைவி செல்வி (41) இவர்களது மகள் அபிநயா 10ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டின் முன்பகுதியில் கீற்றுக்கொட்டகை அமைத்து அதில் சமையல் செய்து வந்துள்ளனர். கடந்த 30ம் தேதி இரவு மூவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் கீற்றுக்கொட்டகை தீ பிடித்து எரிந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட வீடு தூக்கத்தில் இருந்தவர்கள் கண் விழித்து கீற்றுக் கொட்டகை எரிவதை கண்டு அதிர்ச்சியில் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்க வீடுகளில் இருந்தவர்கள் ஓடி வந்து மூவரையும் பாதுகாப்பாக வெளியே மீட்டனர். அத்துடன் தீயை அணைக்க முயன்றனர். இந்த படபடப்பில் சமையலுக்கு பயன்படுத்திய காஸ் தீ பிடித்த கொட்டகையில் இருந்ததை கவனிக்கவில்லை. இந்நிலையில் தீயில் காஸ் வெடித்து சிதறியது. இதில் முருகையன் மனைவி செல்வி, மகள் அபிநயா, தீயை அணைக்க முயன்ற அப்பகுதியை சேர்ந்த காசிநாதன், ராஜசேகர், பழனிவேல், வேம்பையன், கலையரசி, புவனேஷ், செல்வராஜ், காளியம்மாள் உள்ளிட்ட பத்து பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்றனர். தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக், எஸ்.பி.,சுந்தரவதனம் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் பார்வையிட்டனர். மாவட்ட ஆட்சியர் ரேவதி சிகிச்சையில் இருப்பவர்களை நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார். இந்த விபத்து குறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிவேல், காசிநாதன், வேம்பையன் ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. காஸ் வெடித்த விபத்தில் ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/accidents/three-died-near-tanjore-gas-blast-accident




