கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘டாக்ஸிக்’. இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 26 ஆம் தேதி வெளியான இந்தப் படம் மக்களிடையே கலவையான. அதே சமயம் அதிகளவில் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. Toxic இந்நிலையில் ‘டாக்ஸிக்’ படத்தைப் பாராட்டி நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " நேற்று 'டாக்சிக்' திரைப்படம் பார்த்தேன். இயக்குநர் கீது மோகன்தாஸ் சினிமா கற்பனைக்கும் அப்பாற்பட்டு இதை எவ்வாறு சிந்தித்து, காட்சிகளை சிறப்பாகச் செயல்படுத்தியிருக்கிறார் என்று வியந்தேன். Hi Movie: "நன்றி தெரிவிக்கும் விழாவுக்கு நயன்தாரா ஏன் வரவில்லை."- கிண்டலடித்த ராதிகா கடினமான காட்சிகளில் குறிப்பாக க்ளைமாக்ஸில் மிகச் சுலபமாக நடித்திருக்கிறார் யஷ். அவருடைய நடிப்பு பாராட்டுக்குரியது. தொழில்நுட்பச் சிறப்பும், தனிநபர்களின் சிறப்பான நடிப்பும், ஒளிப்பதிவும் நிறைந்திருப்பதால் இந்தத் திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சரத்குமார் படக்குழுவின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன். தயவுசெய்து படத்தைப் பார்த்து ஒவ்வொருவரும் உங்கள் சொந்தக் கருத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்" என்று பதிவிட்டிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://cinema.vikatan.com/kollywood/actor-sarathkumar-about-toxic-movie




