சென்னை, திமுக தலைமையில் அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக வடக்கு மண்டல வழக்கறிஞர்கள் அணியினர் கலந்து கொண்டனர். இதில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டர். தீர்மானம் நிறைவேற்றம் இந்த நிகழ்ச்சியில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, தஞ்சையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த கைதை கண்டித்து தவெக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் தவெக அரசு அலட்சியப்போக்குடன் செயல்படுவதாகவும், அதை கண்டித்தும் திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வாக்கு எந்திரத்திற்கு மாற்றாக வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே, கடந்த 3ம் தேதி தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். தஞ்சை ஆர்ப்பாட்டத்தின்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் வந்திருக்க வேண்டும். காவிரியில் ஒருசொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இதுபற்றி இன்று இருக்கும் முதல்-அமைச்சர் வாயை திறந்து பேசவில்லை. முதல்-அமைச்சருக்கு இருக்கும் ஒரே கவலை திமுக மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பதுதான்’ என்றார். அப்போது அங்கு கூடியிருந்த திமுகவினர், நடிகை ஒருவரின் பெயரை கூறி கூச்சலிட்டனர். அப்போது தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், எங்கே தண்ணீர் வருகிறதோ இல்லையோ அங்கே தண்ணீர் வர வேண்டும். நான் காவிரியை கூறினேன்’ என்றார். இந்த பேச்சு இரட்டை அர்த்தம் கொண்டதாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும், ஆபாசமாகவும் இருந்ததாக கூறி உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-resolution-condemns-udayanidhi-stalin-arrest




