தெலங்கானா மாநிலம் ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் கோமதி ஸ்ரீஜனா என்ற பெண் குழந்தைகள் மருத்துவத்தில் முதுகலைப் படிப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக ஸ்ரீஜனாவைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறி அவரது குடும்பத்தினர் போலீஸாரை அணுகினர். உடனே போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்பெண்ணின் மொபைல் போன் சிக்னலை வைத்து அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து தேடியபோது ஐதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் இருப்பது தெரிய வந்தது. பெயரை மாற்றி கொடுத்த ஜோடி அங்கு சென்றபோது ஸ்ரீஜனா இறந்து கிடந்தார். ஸ்ரீஜனாவின் உடலில் பல காயங்கள் இருந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பெண்ணும் அவரது காதலன் ஸ்ரீனிவாசும் சேர்ந்து அங்குள்ள எஸ்ஆர் நகரில் உள்ள கோகுல் பிரைட் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். மேலும் அப்பெண் தனது பெயரை துர்கா என்றும், அவரது காதலன் தனது பெயரை கணேஷ் என்று ஹோட்டலில் பெயரை மாற்றிக்கொடுத்து இருந்தனர். அதிகாலையில் காதலன் ஓட்டம் விசாரணையில் ஸ்ரீனிவாஸ் அதிகாலை 3 மணிக்கு ஹோட்டலில் இருந்து புறப்பட்டு சென்றது கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தெரிய வந்தது. இரவில் இரண்டு பேருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஸ்ரீஜனாவை ஸ்ரீனிவாஸ் கொலை செய்து இருக்கவேண்டும் என்று போலீஸ் அதிகாரி ரமனா ரெட்டி தெரிவித்துள்ளார். ஹோட்டலில் இருந்து சென்ற பிறகு ஸ்ரீனிவாஸ் பிறகு அவர் திரும்ப வரவில்லை. ஸ்ரீனிவாஸ் தற்போது தலைமறைவாக இருக்கிறார். தங்க செயின் ஒன்றை திரும்ப கொடுப்பது குறித்து விவாதிப்பதற்காக அவர்கள் ஹோட்டலுக்கு வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தற்போது ஸ்ரீனிவாசை போலீஸார் தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/medical-student-who-went-to-a-hotel-with-male-friend-found-dead



