"இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் இதுவரை கண்டிராத அளவிலான ராணுவப் பலத்தோடும், அதிகாரத்தோடும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராகத் தாக்கத் தயாராக, முழு வீச்சில் அமெரிக்கா தயாராக இருக்கிறது. ஈரான் மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகள் கேட்டுக்கொண்டதால் இந்தத் தாக்குதலை ரத்து செய்ய நான் ஒப்புக்கொண்டுள்ளேன்". - கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட பதிவு இது. அப்போது இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாகக் கூறினார் அவர். மறுக்கும் ஈரான் ஆனால், அவர் பேச்சை முற்றிலும் மறுத்து நேற்று (ஆகஸ்ட் 3) ஈரான் பேசியுள்ளது. ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகாயி"இஸ்ரேலும் கைகோக்கிறது: ஈரான் போருக்கு தயார்; ஆனாலும் நிறுத்துகிறோம்" - ட்ரம்ப் கூறும் காரணம் என்ன? ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் எஸ்மாயில் பாகாயி, "தற்போது ஈரான் வாஷிங்டன்னுடன் எந்தப் பேச்சுவார்த்தையிலும் இல்லை. ஹார்முஸ் நீர்ச்சந்தியில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்திற்காக தற்போது ஓமன் உடன் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்று கூறியுள்ளார். ட்ரம்ப் பதிவு இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். "ஈரானியத் தலைமையின் இரட்டை வேடத்தை நம்பவே முடியாது. பித்தலாட்ட பேச்சுகள். பேச்சுவார்த்தையை அவர்கள்தான் கேட்கிறார்கள். சிலர் அதை 'கெஞ்சுகிறார்கள்' என்றும் சொல்வார்கள். பேச்சுவார்த்தையும் தொடங்கி, அடுத்தடுத்த சந்திப்புகளுக்கான நேரமும் ஒதுக்கப்படுகிறது. ஆனால் வெளியிலோ, 'நாங்கள் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை, எதைப் பற்றியும் பேசவில்லை. நாங்கள் ஓமன் நாட்டோடு மட்டுமே பேசுகிறோம்' என்று பகிரங்கமாகவும் பெருமையாகவும் பேசுகிறார்கள். அத்துடன் நிறுத்தாமல், 'ஹார்முஸ் நீர்ச்சந்தி எங்கள் கட்டுப்பாட்டில்தான் இயங்கும்' என்று தங்களின் வழக்கமான பித்தலாட்டமான பேச்சுகளைத் தொடர்கிறார்கள். ட்ரம்ப் பதிவு"காங்கிரஸ் மேலிடம் சொல்வதை விட, திமுக சொல்வதை தான் டி.கே.சிவக்குமார் கேட்பார்" - நிர்மல் குமார் பிரச்னைக்குத் தீர்வு காண்கிறோம் உண்மையில் அது ஏற்கெனவே அமெரிக்கக் கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டிலும், நமது 'உபாயக் முடக்கத்திலும்' அல்லது சிலர் சொல்வது போல் 'அமெரிக்காவின் எஃகுச் சுவரிலும்'தான் உள்ளது. நாங்கள் நினைத்தால் ஒழிய ஈரானுக்குள் எதுவும் நுழைய முடியாது. ஒரு சுமுகமான ஒப்பந்தம் எட்டப்படும் வரையிலோ அல்லது அவர்கள் முற்றிலுமாகச் சரணடையும் வரையிலோ எதுவுமே உள்ளே செல்லப் போவதும் இல்லை. ஈரான் அதை ஒத்துக்கொள்ள விரும்புகிறதோ இல்லையோ, பல தசாப்தங்களாக அவர்களே உருவாக்கிய ஒரு பிரச்னைக்குத்தான் நாங்கள் இப்போது தீர்வு காணப் பேசிக்கொண்டிருக்கிறோம். விஷயம் மிகவும் எளிமையானது, ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தைப் பெற முடியாது!" முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/trump-accuses-iran-of-mixed-signals-amid-nuclear-negotiations




