ஜோத்பூர், இந்திய விமானப்படை மற்றும் ஜப்பான் நாட்டு வான் தற்காப்புப்படை ஆகியவை இணைந்து நடத்திய ‘வீர் கார்டியன் 2026’ என்ற இருதரப்பு கூட்டு விமானப்படை பயிற்சி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான வான்வெளி பாதுகாப்பு ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கும், உத்திசார் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்த கூட்டுப்பயிற்சி ஒரு முக்கிய தளமாக அமைந்தது. சீறிய பாய்ந்த ரபேல், தேஜஸ் சுமார் 14 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த பயிற்சியில், இந்திய விமானப்படை சார்பில் அதிநவீன எஸ்யூ-30 எம்கேஐ, ரபேல் மற்றும் இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான இலகு ரக போர் விமானமான 'தேஜஸ்' உள்ளிட்ட பல்வேறு விமானங்கள் பங்கேற்று விண்ணில் சீறிப் பாய்ந்தன. ஜப்பான் வான் தற்காப்புப்படை சார்பில் அவற்றின் புகழ்பெற்ற எப்-2ஏ ரக போர் விமானங்கள் இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. தேஜஸ்' போர் விமானம் 'தேஜஸ்' போர் விமானம் இந்த பயிற்சியின் சிறப்பு விருந்தினர் தினத்தன்று ஒரு முக்கிய நிகழ்வு அரங்கேறியது. ஜப்பான் வான் தற்காப்புப்படை தலைமைத்தளபதி ஜெனரல் டேகிரோ மோரிடா மற்றும் இந்திய விமானப்படை தலைமைத்தளபதி ஏர் சீப் மார்ஷல் ஏ.பி.சிங் ஆகியோர் ஜோத்பூர் விமானப்படை தளத்தில், இந்தியாவின் பெருமையான 'தேஜஸ்' போர் விமானத்தை நேரில் இயக்கி பறந்து அசத்தினர். இது இரு நாட்டு ராணுவ நட்புறவின் உச்சகட்டமாக பார்க்கப்பட்டது. தீவிர ஆலோசனைகள் 14 நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில், இரு நாட்டு வான்படை வீரர்களுக்கும் இடையே பல்வேறு துறை சார்ந்த நிபுணர் பரிமாற்றங்கள், செயல்பாட்டு விவாதங்கள் மற்றும் பணி திட்டமிடல் கூட்டங்கள் நடைபெற்றன. மேலும், பொறியியல் கலந்துரையாடல்கள், பராமரிப்பு நடைமுறைகள் மற்றும் வான்வெளி பாதுகாப்பு உத்திகள் குறித்தும் இரு நாட்டு அதிகாரிகளும் விரிவாக கலந்துரையாடி தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/india-japan-air-force-joint-exercise-concludes-jodhpur




