சென்னை, ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த 17-ந் தேதி வெளியான திரைப்படம் 'தி ஒடிசி'. கிரேக்க இலக்கிய காவியமான 'ஒடிசி'யை மையமாக வைத்து இயக்கப்பட்டிருக்கிறது. கிரேக்க காவியத்தில் சிறப்பானதாக பார்க்கப்படும் டிரோயன் போரின் பங்கேற்ற ஒடிசியஸ் என்ற மன்னனை முதன்மைப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. அந்த போருக்கு பின் ஒடிசியஸ் நாடு திரும்பும் பயணத்தில் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதைக்களம். 250 மில்லியன் அமெரிக்க டாலரில் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,500 கோடி) தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ஜெண்டயா உள்பட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வசூல் வேட்டை இப்படம் வெளியான ஒரு வார காலத்தில் சுமார் 364 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.3,500 கோடி) வசூல் செய்திருக்கிறது. உலகம் முழுவதும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஒடிக்கொண்டிருக்கும் இந்த திரைப்படம், இந்தியா முழுவதும் சுமார் 1,500 காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது. இந்தியாவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், இந்த ஒரு வாரத்தில் ரூ.118 கோடியை வசூல் செய்திருக்கிறது. இந்த வசூல் வேட்டை இன்னும் அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/box-office-storm-the-odyssey-such-massive-collections-in-india-alone




