திருக்கழுக்குன்றம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் திரிபுரசுந்தரி அம்மன் ஆடிப்பூர உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. வருகிற 7-ம் தேதி, திரிபுரசுந்தரி அம்மன் வேதகிரீஸ்வரர் மலையை சுற்றி கிரிவலம் வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள, திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை வேதகிரீஸ்வரர் கோயில் மிகவும் தொன்மை வாய்ந்த கோயிலாகும். இக்கோயிலில் மலை மேல் வேதகிரீஸ்வரரும் தாழக்கோயில் என அழைக்கப்படும் பெரிய கோயிலில் திரிபுரசுந்தரி அம்மனும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இக்கோயில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரால் தேவாரப் பெற்ற சிவத்தலமாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் திரிபுரசுந்தரி அம்மனுக்கு ஆடிப்பூர உற்சவம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு இன்று அதிகாலை திரிபுரசுந்தரி அம்மன் கோயில் வளாகத்தின் எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதனைதொடர்ந்து திரிபுர சுந்தரி அம்மன் வீதி உலா நடைபெற்றது கிரிவலம் வரும் அம்மன் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், தினமும் திரிபுரசுந்தரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடைபெறும். பல்வேறு வாகனங்களில் திரிபுர சுந்தரி அம்மன் எழுந்தருளி மாடவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். வருகிற 7-ம் தேதி, திரிபுரசுந்தரி அம்மன் அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளி வேதகிரீஸ்வரர் மலையை சுற்றி கிரிவலம் வரும் நிகழ்வு நடைபெறும். 11-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருளி மாடவீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். திருக்கல்யாணம் வருகிற 15-ம் தேதி இரவு மூலவர் அம்பாளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவமும், பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவும் நடைபெற உள்ளது ஆடிப்பூர திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/devotional/aadi-pooram-festival-has-begun-at-vedagireeswarar-temple-thirukkalukkundram




