நீலகிரி, சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நேற்றும், இன்றும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அம்மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களுக்கு உள்பட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை இந்நிலையில், கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று (07.07.2026 - செவ்வாய்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கூடலூர், பந்தலூர் தாலுகாக்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவு பிறப்பித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-holiday-announced-for-schools-in-two-taluks




