தூத்துக்குடி, தூத்துக்குடி புறநகர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை மாற்றி, தி.மு.க.வில் இருந்து வந்தவர்களுக்கு பதவி வழங்குவதாகக் கூறி, கட்சியின் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் மதன்ராஜா தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மதன்ராஜா, கடந்த சில மாதங்களாக மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகளைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தனது ஆதரவாளர்களுக்கும், உறவினர்களுக்கும் புதிய பொறுப்புகளை வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. புதிய ஒன்றிய செயலாளர் அறிவிப்பு இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த குழந்தைராஜா என்பவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தனது உறவினரும் தி.மு.க.வைச் சேர்ந்தவருமான பாரத் என்பவரை புதிய ஒன்றிய செயலாளராக அமைச்சர் மதன்ராஜா அறிவித்தார். த.வெ.க. நிர்வாகி தற்கொலை முயற்சி இப்பதவி மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மனமுடைந்தும், குழந்தைராஜாவின் ஆதரவாளரும் த.வெ.க. ஒன்றிய இளைஞர் அணி செயலாளருமான முத்துக்குமரன் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் நேரடியாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு உருக்கமான வீடியோ முன்னதாக, த.வெ.க. தலைவரும் தமிழக முதல்-அமைச்சருமான விஜய்க்கு அவர் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோவில் பேசியிருப்பதாவது: "கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து 26 ஆண்டுகளாக உங்களது தீவிர ரசிகனாக உங்களுடன் பயணித்து வருகிறேன். நீங்கள்தான் என் உலகம், என் உயிர் என்று வாழ்ந்து வருகிறேன். நீங்கள் கட்சித் தொடங்கியபோது தீவிரமாக கட்சிப் பணியாற்றினேன். நடவடிக்கை இல்லை இன்று நீங்கள் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், தூத்துக்குடி புறநகர் மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் நடக்கும் குளறுபடிகளைப் பார்க்கும்போது உங்களின் பெயர் தொடர்ந்து களங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உங்களுக்கு பலமுறை இமெயில் அனுப்பியுள்ளேன்; நேரில் பேசவும் முயற்சித்தேன். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தி.மு.க. கூடாரமாக மாறி வருகிறது நமது கட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, தி.மு.க.வில் இருந்து புதிதாக வந்தவர்களுக்கே நமது கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் நமது கட்சி தி.மு.க. கூடாரமாக மாறி வருகிறது. உங்களுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தும் நோக்கிலேயே இங்குள்ள நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள்" என்று வேதனையுடன் கூறிக்கொண்டே அவர் விஷம் அருந்தியுள்ளார். போலீசார் விசாரணை சமூக வலைதளங்களில் அதிவேகமாகப் பரவி வரும் இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷம் அருந்திய த.வெ.க. நிர்வாகி முத்துக்குமரன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-executive-attempts-suicide-by-consuming-poison-heartfelt-video-released-for-chief-minister-vijay




