விழுப்புரம், கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி கோமதி (வயது 45). கணவன்-மனைவி இருவரும் கடந்த 1-ந்தேதி வெளியூருக்கு காரில் சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கம்பியாம்புலியூருக்கு இரவு சுமார் 9 மணி அளவில் வந்ததும் அங்குள்ள டீக்கடையில் காரை நிறுத்திவிட்டு இருவரும் டீ குடித்தனர். பின்னர், கோமதி மட்டும் அங்குள்ள கழிவறைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். 4 பவுன் சங்கிலி பறிப்பு அப்போது கழிவறை அருகில் பதுங்கி இருந்த மர்மநபர் ஒருவர் திடீரென கோமதி அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்தார். இதை சற்றும் எதிர்பாராத அவர் திருடன்.திருடன். என்று கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் நகையுடன் அந்த மர்மநபர் தப்பிஓடி விட்டார். பறிபோன நகையின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்து கோமதி விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/villupuram-4-sovereign-gold-chain-snatched-from-woman-visiting-restroom




