நாங்குநேரி, விபத்தில் படுகாயமடைந்த போலீஸ் ஏட்டுக்கு ரூ.17 லட்சத்து 84 ஆயிரத்து 233 இழப்பீடு வழங்க வேண்டும் என நாங்குநேரி சப்-கோர்ட் நீதிபதி ரஸ்கின்ராஜ் உத்தரவிட்டுள்ளாார். போலீஸ் ஏட்டு அரசு பஸ் மோதி படுகாயம் தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் சத்யாநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 64). இவர் கடந்த 2016-ம் ஆண்டு மூலைக்கரைப்பட்டியில் போலீஸ் ஏட்டாக பணியாற்றினார். இவர் கடந்த 8.9.2016 அன்று தனது பைக்கில் மெஞ்ஞானபுரம்-நாசரேத் சாலையில் சென்றபோது, அரசு பஸ் மோதிய விபத்தில் படுகாயமடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இழப்பீடு கேட்டு வழக்கு பின்னர் அவர் இழப்பீடு கேட்டு நாங்குநேரி மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, முகேசனுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சத்து 21 ஆயிரத்து 512 வழங்குமாறு கடந்த 29.7.2025 அன்று உத்தரவிட்டார். ஆனால் அவருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இழப்பீடாக ரூ.17 லட்சத்து 84 ஆயிரத்து 233 வழங்க உத்தரவு இதனைதொடர்ந்து அவர் நாங்குநேரி கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனுதாக்கல் செய்தார். தொடர்ந்து அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய நாங்குநேரி சப்-கோர்ட் நீதிபதி ரஸ்கின்ராஜ், பாதிக்கப்பட்ட முருகேசனுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.17 லட்சத்து 84 ஆயிரத்து 233 வழங்குமாறு தீர்ப்பு அளித்தார். உடனடியாக கோர்ட்டில் பணம் செலுத்தப்பட்டதால் ஜப்தி செய்த பஸ்சை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/rs178-lakh-compensation-for-police-officer-seriously-injured-in-accident




